சேவை விதிமுறைகள்

Google ("சேவை") வழங்கும் அரட்டை அம்சங்களைப் பயன்படுத்துவதன் மூலம், Google சேவை விதிமுறைகள், Google தனியுரிமைக் கொள்கை ஆகியவற்றுடன் இந்தக் கூடுதல் விதிமுறைகளையும் (மொத்தமாக “சேவை விதிமுறைகள்”) ஏற்று, அவற்றுக்கு இணங்கிச் செயல்பட ஒப்புக்கொள்கிறீர்கள். தொலைபேசி எண்களைக் கொண்டு அரட்டை அம்சங்கள் செயல்படும் என்பதால், பிற சேவை வழங்குநர்கள் மூலமாக அந்தத் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். சேவையை வழங்குவதற்கான அரட்டை அம்சத்தின் திறன்களை அறிய, உங்கள் தொடர்புகள் அவ்வப்போது சரிபார்க்கப்படக்கூடும் என்பதை ஏற்கிறீர்கள். உங்கள் தொலைபேசி எண்ணைச் சரிபார்க்கவும் சேவையை வழங்கவும், சாதன அடையாளங்காட்டிகள் அல்லது சிம் கார்டு தகவல் உள்ளிட்ட, உங்கள் சாதனத் தகவலை Google அவ்வப்போது உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் பகிரலாம். உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனம் வழங்கும் அம்சங்களுக்கும் சேவைகளுக்கும் (எ.கா. தொலைத்தொடர்பு நிறுவன அழைப்பு, SMS/MMS உள்ளிட்ட செய்தியிடல் போன்றவை) இந்தச் சேவை விதிமுறைகள் பொருந்தாது. உங்கள் செய்தியிடல் ஆப்ஸின் அமைப்புகளுக்குச் சென்று, சேவையை முடக்குவதன் மூலம், அதைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளலாம்.

சேவையை வழங்குவது Google LLC இன் துணை நிறுவனமான Jibe Mobile, Inc ஆகும்.